மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று (13.8.2024) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.இதேவேளை மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.