📌ஜனாதிபதித் தேர்தலில் பார்வைக் குறைப்பாடு அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர் பிரிதொரு உதவியாளருடன் வாக்களிக்க வருவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
