🚨கரையோரப் பகுதிகள் ஊடாக நடந்து இலங்கையை சுற்றிவந்த பெருமையை பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் பெற்றார்.1500 கிலோ மீற்றர் தூரத்தை அவர் 45 நாட்களில் பூர்த்திசெய்தார். பேருவளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சஹ்மி ஷஹீத் அம்பலாங்கொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, சுன்னாகம், மன்னார், மதவாச்சி, அனுராதபுரம், புத்தளம், மாரவில, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய நகரங்களை கடந்து பேருவளையை அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
