*📌மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று 28ஆம் திகதி மாலை குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.*
