*📌அரசியல் கட்சிகளின் பிரச்சார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு எதிராக வாகன உரிமையாளர்களுக்கு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.* *பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் அவ்வாறான விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும், அவ்வாறாக விளம்பரங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.*
