📌அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.* *ஏனைய தலைவர்கள் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் செல்லும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே மேடைக்கு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதாக மேடையில் அறிவிக்க முடியும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.*
