*📌சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.**“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது வாக்குகளை வீணாக்குவதை விடுத்து எமக்கு வாக்களிக்க வேண்டும். விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பது என்பது அநுர திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதாகும். திசாநாயக்கவுக்கு வாக்களிப்பது, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவான வாக்களிப்பாகும்” என தெரிவித்தார்.*
