🚨இன்று புதன்கிழமை அதிகாலை, கிளாட்ப்ரூக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த குடியிருப்பு Airbnb ஆல் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது. இது கொலை வழக்காக இருக்கலாம் என கருதும் போலீசார், சம்பவம் தொடர்பாக இரண்டு சுவிஸ் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.Glattbrugg இல் உள்ள Riedthofstrasse இல் உள்ள அபார்ட்மெண்டில் குறித்த சம்வம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இலங்கையை சேர்ந்த 34 வயதுடைய நபரை மீட்டதாக தெரிவிக்கின்றனர்.அவரை உயிர்பிழைக்கவைக்கும் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பலனழிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பாக எதுவித தகவலும் வெளியிடப்படவில்லை. குறித்த வீடு அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளமையினால் அருகில் உள்ளவர்களிடம் தகவல்களை பெறுவதும் கடினமாக உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.எனினும் சம்பவ இடத்தில் 40 மற்றும் 54 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்களை சூரிச் கன்டோனல் பொலிஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபருடன் அவர்கள் குடியிருப்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.குறித்த மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது தொடர்பான, சூரிச் காவல்துறை மற்றும் உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகத்தால் மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் வழக்கு வெளிவரும்போது மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
