*ஜனாதிபதி வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும்!* ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளின் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இரண்டாம் சுற்றுக்கு செல்லப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் முடிவடைந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை 7 மணிக்கு பின்னர் ஆரம்பமாகி நள்ளிரவை தாண்டி தொடரும் பட்சத்தில் அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாக்கெண்ணும் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மாத்திரமே இம்முறை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், தேவை ஏற்படும் பட்சத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பினை வழங்கும் பொருட்டு முப்படையினர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.தற்போது சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் நம்புமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
