🛑தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.**அது எதிர்வரும் 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.**இந்த தொகுதியின் தாக்கத்தினால் நாட்டின் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும். வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
