🛑திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் இன்று (30) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சீனக்குடா பிரதேசத்தில் இருந்து திருகோணமலை கடற்கரைக்கு கடல் குளிப்பதற்காக சக நண்பர்களுடன் வருகை தந்து குளித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
