🚨கோயிலுக்குச் சென்று வந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர் சந்திக்கு அருகில் முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.இவ்விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.காயமடைந்த பெண் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
