📌களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
