🚨இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஆனாலும், வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளுக்கு நெருக்கமாக அவரே இருக்கிறார். அதேநேரத்தில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வாக்கு சதவீதம் குறைந்தே இருக்கிறது.**ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும்.
