📌இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும்.
ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறினார்.