Author name: Mayuran Mayuran

🚨சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது!!!

🚨சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.எனினும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

🚨சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது!!! Read More »

🚨 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது!!!

🔴 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளையிலிருந்து (6) பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.**மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை

🚨 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது!!! Read More »

🚨நேற்றைய (04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன!!!

🔴 நேற்றைய (04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்று மட்டும் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

🚨நேற்றைய (04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன!!! Read More »

🚨பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்!!!

🔴 பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

🚨பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்!!! Read More »

🚨கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!!

🔴 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.**தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚨கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது!!! Read More »

🚨சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்!!!

🚨சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை(3) அதிகாலை இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற அணியினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.இதன் போது குறித்த

🚨சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்!!! Read More »

🚨இன்று மது ஒழிப்பு தினம், இலங்கையில் அனைத்து மதூபான சாலைகளும் பூட்டப்பட்டுள்ளது!!!

🚨உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03)

🚨இன்று மது ஒழிப்பு தினம், இலங்கையில் அனைத்து மதூபான சாலைகளும் பூட்டப்பட்டுள்ளது!!! Read More »

🚨மீண்டும் சிலிணடர் சின்னத்தில் ரணிலின் புதிய கூட்டணி!!!

🔴 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🚨மீண்டும் சிலிணடர் சின்னத்தில் ரணிலின் புதிய கூட்டணி!!! Read More »

🚨ஜனாதிபதியால் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல்கள் நிரூபிக்கப்பட வேண்டும் – நாமல்

🚨ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

🚨ஜனாதிபதியால் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல்கள் நிரூபிக்கப்பட வேண்டும் – நாமல் Read More »

🚨அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது!!!

🚨அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகும்.கடந்த 2023 ஜூன் 8 ஆம் திகதி இறுதியாக டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 300 ரூபாவுக்கும் குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

🚨அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது!!! Read More »