🚩Travel log Trincomalee chinabey🚩
🚩Travel log Trincomalee chinabey🚩 Read More »
திருகோணலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது.**பேராதனை , மற்றும் பதுளை செங்கலடி வீதியின் புனரமைப்பு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகையின் மீதியிருக்கும் பணத்தொகையை இதற்காக ஒதுக்கப்படுவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதிநயத்தின் பணிப்பாளர் (சட்ட) அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோர் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
📌இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறினார்.
🔴ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.* *வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
எதிர்வரும் ஆண்டுகளில் திறைசேரி தற்போதைய செலவின அளவைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று கணித்த சிரேஷ்ட ஜனாதிபதியின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நாட்டில் தற்போதுள்ள அரச 1.3 மில்லியன் ஊழியர்களின் எண்ணிக்கையில் இருந்து 750,000 ஊழியர்களாகக் குறைக்கப்பட வேண்டும் என்றார்.“நாங்கள் முன்னேறும்போது, கருவூலத்தில் இருக்கும் நிதி வரும் ஆண்டுகளில் போதுமானதாக இருக்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். பெரிய பொதுத் துறையை எங்களால் தாங்க முடியாது. எனவே, நாங்கள் பொது சேவைகளை பகுத்தறிவு செய்ய வேண்டும்,
🛑தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.**அது எதிர்வரும் 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.**இந்த தொகுதியின் தாக்கத்தினால் நாட்டின் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி
🔴*இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.**இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
🔴. அதன்படி இன்றுமுதல் முதியோர் கொடுப்பனவாக 3,000 ரூபாவை வைப்பிலிடவுள்ளது.
🔴 வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் (டக்ளஸ் தேவானந்தா) நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கு, இரகசிய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.**டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை