Uncategorized
🛑பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 10 மணிவரை அளிக்கப்பட்ட வீதம்!!!
📌*கொழும்பு 20%கண்டி 25 %நுவரெலியா 20 %பதுளை 21 %திகாமடுல்ல 18 %மட்டக்களப்பு 15 %கேகாலை 20 %புத்தளம் 22 %மாத்தறை 10 %களுத்துறை 20 %திருகோணமலை 23 %குருநாகல் 22 %பொலன்னறுவை 22 %யாழ்ப்பாணம் 16 %
🛑பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 10 மணிவரை அளிக்கப்பட்ட வீதம்!!! Read More »
🛑கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் 32 வயதான சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!!!
📌ஸ்கேன் பாரிசோதனை செய்த போது, அவர் உடலில் மறைத்து போதைப்பொருளை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் விழுங்கிய போதைப்பொருள் அடங்கிய 17 குழிசைகள் மீட்கப்பட்டுள்ளன.**இந்த போதைப்பொருள் கொக்கெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🛑17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!!!
🔴📌கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது.இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது!!!
🔴அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
📌10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது!!! Read More »
📌தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது!!!
🔴தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு, மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.
📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2999 ஆக அதிகரித்துள்ளது!!!
🔴தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 808 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2191 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2999 ஆக அதிகரித்துள்ளது!!! Read More »
📌வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது!!!
🔴இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று (12) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆன்னைகுழுவின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்தார்.