Uncategorized
📌மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்!!!
🔴தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.**”சுமார் ஒன்றரை ஆண்டுகளில், மின்சார துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இந்த மின் கட்டணத்தை 30% வீதத்திற்கும் அதிகமாக குறைக்கவுள்ளோம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். எரிபொருள் விலையும் அவ்வாறுதான்… இவற்றை நாங்கள் செய்வோம்.”
📌திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!!!
🔴 அதற்கமைய, திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.**குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🛑சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது!!!
🔴மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
📌2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்!!!
🛑அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2088 ஆக அதிகரித்துள்ளது!!!
🔴தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1613 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
📌பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2088 ஆக அதிகரித்துள்ளது!!! Read More »
🛑நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது!!!
🔴பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
🛑வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது!!!
🔴எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.